Home One Line P1 மஇகா: அதிகமான இந்தியர்கள் இருக்கும் தொகுதிகளில் போட்டியிட எண்ணம்!

மஇகா: அதிகமான இந்தியர்கள் இருக்கும் தொகுதிகளில் போட்டியிட எண்ணம்!

659
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் இந்தியர்கள் அதிகமாக இருக்கும் நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதை மஇகா நோக்கமாகக் கொண்டுள்ளதாக அதன் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னர் கெராக்கான் கட்சியால் போட்டியிட்ட இடங்கள் உட்பட புதிய இடங்களுக்கும் கவனம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி தலைவரிடம் நான் இது குறித்து கூறியுள்ளேன், மஇகா புதிய இடங்களில் வெல்லும் வாய்ப்பு அதிகம்.”

தொடக்க புள்ளியாக, இந்த சாத்தியமான பகுதிகளில் ஒன்றில் கட்சி ஒருங்கிணைப்பாளரை நாங்கள் நியமிப்போம், இதனால் நாங்கள் மக்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முடியும்,” என்று அவர் கூறினார்.

கெராக்கான் தேசிய முன்னணியுடன் இல்லாததால், நாடாளுமன்ற பணிகளைச் செய்ய ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டியது அவசியம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இளம் வாக்காளர்களிடையே மக்களின் ஆதரவை மீட்டெடுப்பதில் முவாபாக்காட் நேஷனல் முக்கிய பங்கு வகிப்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

தேசிய முன்னணி மற்றும் பாஸ் ஒரு வலுவான எதிர்க்கட்சி கூட்டணியாக இருக்க இது ஒரு நல்ல தருணம் என்றும், மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான இரண்டாவது வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.