Home இந்தியா சென்னையில் பூமிக்கு அடியில் ஆங்கிலேயர் கால பாலம் கண்டுபிடிப்பு!

சென்னையில் பூமிக்கு அடியில் ஆங்கிலேயர் கால பாலம் கண்டுபிடிப்பு!

508
0
SHARE
Ad

Tamil_News_large_702298சென்னை, ஏப்ரல் 30 – சென்னையில் சமீபத்தில் பூமிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டிடம், ஆங்கிலேயர் கால கட்டுமானம் என தொல்லியல் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம் எதிரே, மின் வாரிய பணிகளுக்காக பஸ் நிறுத்தத்திற்கு அருகே பள்ளம் தோண்டிய போது, பழங்கால கட்டுமானம் இருந்தது தெரிய வந்தது.

சாலைக்கு கீழே மூன்று கருங்கல் தூண்கள் உள்ளன.அதற்கு கீழே சிறிய செங்கற்களால் அமைக்கப்பட்ட 100 அடி நீள சுவர் உள்ளது.

#TamilSchoolmychoice

பஸ் நிலையத்திலிருந்து 10 அடி தூரத்தில் அரை வட்ட வடிவில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு கீழே பாதாள சுவர் உள்ளது. இது குறித்து தொல்லியல் வல்லுனர்கள் சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வு குறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

“இது ஆங்கிலேயர் காலத்து கட்டுமானமாக இருக்கலாம். நீர் வழித் தடம் இருந்ததற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. இக்கட்டுமானம் நீர் வழியைக் கடப்பதற்காக அமைக்கப்பட்ட பாலமாகவும் இருக்கலாம்.அப்பகுதியில் பாலம் அமைந்ததற்கான காரணம் குறித்து, அடுத்தடுத்த ஆய்வுகளில் தெரியவரும்” இவ்வாறு தொல்லியல் அதிகாரி தெரிவித்தார்.