Home கலை உலகம் படப்பிடிப்பில் ஜஸ்வர்யாஅர்ஜுன் மயங்கி விழுந்தார்!

படப்பிடிப்பில் ஜஸ்வர்யாஅர்ஜுன் மயங்கி விழுந்தார்!

564
0
SHARE
Ad

Arjun-daughter-Aishwaryaதிருச்சி, ஏப்ரல் 30 – பூபதிபாண்டியன் இயக்கததில் விஷால் நடித்து வரும் படம் பட்டத்து யானை. இந்த படத்தில் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படம் தனக்கு முதல் படம் என்பதால் எத்தனை சவாலான காட்சி என்றாலும், உற்சாகமாக நடித்து வருகிறாராம் ஐஸ்வர்யா.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் நடந்து வருகிறது. அங்கு, விஷால், ஐஸ்வர்யா இருவரையும் வில்லன்கள் துரத்துவது போன்ற காட்சியை படமாக்கி வருகிறார்களாம்.

#TamilSchoolmychoice

அந்த காட்சி சரியாக வராததால் திரும்பத்திரும்ப அவர்களை கொளுத்தும் வெயிலில் விட்டு படமாக்கினார்களாம். இதனால், வெயில் தாங்காமல் திடீரென்று மயங்கி கீழே சாய்ந்து விட்டாராம் ஐஸ்வர்யா. இந்த தகவலை உடனடியாக நடிகர் அர்ஜூனுக்கு தெரியப்படுத்தினார்களாம்.

உடனடியாக படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு விரைந்த அவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மகளுக்கு சிகிச்சை கொடுத்து வருகிறாராம். இதையடுத்து தேவையான ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் ஐஸ்வர்யா அர்ஜூன்.