Home 13வது பொதுத் தேர்தல் மக்கள் கூட்டணியில் இணைந்ததால் சுங்கை சிப்புட்டில் மீண்டும் ஜெயக்குமார் வெற்றி பெறும் வாய்ப்பு!

மக்கள் கூட்டணியில் இணைந்ததால் சுங்கை சிப்புட்டில் மீண்டும் ஜெயக்குமார் வெற்றி பெறும் வாய்ப்பு!

742
0
SHARE
Ad

Michael-Jeyakumar---Sliderபிப்ரவரி 1 – கொஞ்ச காலமாக சுங்கை சிப்புட் தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் ஜெயகுமார் (படம்) மீண்டும் மக்கள் கூட்டணி சார்பாக போட்டியிடுவாரா அல்லது தனது சொந்த கட்சியான பிஎஸ்எம் எனப்படும் பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா கட்சி சார்பாக போட்டியிடுவாரா என்ற இழுபறி நிலை நிலை இருந்து வந்தது.

இதற்கிடையில் முன்னாள் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு சுங்கை சிப்புட் தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்புக் குழ தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த தொகுதியை மீண்டும் ம.இ.கா கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமடைந்தது போன்றதொரு தோற்றம் ஏற்பட்டது.

பிஎஸ்எம் கட்சி சார்பாக மைக்கல் ஜெயக்குமார் தனித்துப் போட்டியிட்டால் அதனால் ஏற்படும் குழப்பத்தினால் சுங்கை சிப்புட் தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்றும் வாய்ப்பு ஏற்படும் என்ற நிலைமை உருவாகியது.

#TamilSchoolmychoice

ஆனால் தற்போது பிஎஸ்எம் கட்சி சுமுகமான பேச்சு வார்த்தையின் மூலம் மக்கள் கூட்டணியில் இணைந்து விட்டதால், ஜெயக்குமார் மீண்டும் மக்கள் கூட்டணி சார்பாக சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளதுடன் அந்த தொகுதியை அவர் மீண்டும் வென்றெடுக்கும் சாத்தியமும் உருவாகி விட்டது.

யார் வேட்பாளர்?

சுங்கை சிப்புட் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்ற ஆரூடங்கள் இதுவரை தொடர்ந்து கொண்டிருப்பதும் அதில் குழப்பம் நீடிப்பதும் ஜெயகுமாருக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

துணையமைச்சர் தேவமணி சுங்கை சிப்புட் தொகுதியில் ம.இ.கா சார்பாக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் இங்கே புதிய வேட்பாளர் என்பதால் வாக்காளர்களைக் கவர்வதில் பலத்த போட்டியை அவர் எதிர்நோக்கக் கூடும்.

ஆனால் ஜெயக்குமார் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருவதுடன் தொடர்ந்து சேவைகளையும் வழங்கி வருவதாலும், அவர் தற்போது மக்கள் கூட்டணியோடு அதிகாரபூர்வமாக இணைந்து விட்டதாலும் சுங்கை சிப்புட் தொகுதியை மீண்டும் அவர் தக்க வைத்துக் கொள்வதில் எந்தவித சிரமமும் இருக்காது.