Home உலகம் மெக்சிகோ பெட்ரோலிய ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

மெக்சிகோ பெட்ரோலிய ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

643
0
SHARE
Ad

722ba411-c756-4239-99ff-0609f1a20ed6_S_secvpf.gifமெக்சிகோ, பிப்.2-அமெரிக்காவின் மெக்சிகோ மாநிலத்தில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

மெக்சிகோ நகரில் பெமெக்ஸ் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 52 மாடிகள் கொண்ட அந்த ஆலையின் நிர்வாக கட்டிடம் தீப்பற்றி எரிந்தது.

தீயில் சிக்கியும், இடிபாடுகளில் நசுங்கியும் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்த திடீர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.