Home நாடு 5 இந்தியர்கள் சுட்டுக்கொலை: “விசாரணை இன்றி எங்கள் பிள்ளைகளைச் சுட்டுக் கொன்றுவிட்டனர்” – பெற்றோர் கண்ணீர்

5 இந்தியர்கள் சுட்டுக்கொலை: “விசாரணை இன்றி எங்கள் பிள்ளைகளைச் சுட்டுக் கொன்றுவிட்டனர்” – பெற்றோர் கண்ணீர்

467
0
SHARE
Ad

downloadபினாங்கு, ஆகஸ்ட் 21 – பினாங்கு மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இந்திய இளைஞர்களின் பெற்றோர்கள் தங்களுக்கு  நீதி வேண்டும்  என்று கூறி நேற்று முன்தினம் இரவு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

முறையான விசாரணை இன்றி தங்கள் பிள்ளைகளை சுட்டுக் கொன்றதற்காக மலேசிய காவல்துறை தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்தனர்.

இவர்கள் அனைவரும் பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாகவும் இதர பல்வேறு குற்றங்கள் தொடர்பாகவும் தேடப்பட்டு வந்தவர்கள் என்று மலேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ  காலிட் அபு பக்கர் செய்தியாளர்களிடம் வழங்கிய தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று அவர்கள் கூறினர்.

#TamilSchoolmychoice

மேலும், இறந்த அந்த 5 இளைஞர்களின் உடல்களையும் அவர்களது பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர். இதற்கு ஒரு நீதி கிடைக்காத வரை சடலங்களை தாங்கள் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அவர்கள் கூறினர்.

எனினும், காவல்துறையுடன் கலந்து பேசிய பின்னர் அவர்கள் சடலங்களைப் பெற்றுச் சென்றனர். அவர்களது இறுதிச் சடங்குகள் பட்டவொர்த் மற்றும் பினாங்கில் நடைபெற்றது.