பினாங்கு, ஆகஸ்ட் 21 – பினாங்கு மாநிலம் சுங்கை நிபோங்கில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து 5 இந்திய இளைஞர்கள் காவல்துறையால் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இதனால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டு, இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இது குறித்து பினாங்கு மாநில ம.இ.கா இளைஞர் பகுதித் தலைவர் ஜே.தினகரன்(படம்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல்துறை அவர்களை சுட்டுக்கொள்வதற்குப் பதிலாக ஏன் கைது செய்ய முயற்சி செய்யவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், காவல்துறையினர் கூறுவது போல் அங்கு துப்பாக்கிச்சூடு நடந்திருந்தால், இறந்தவர்களின் சடலங்கள் முன் அறையில் கிடந்திருக்க வேண்டும். இது குறித்து காவல்துறையினர் விளக்கமளிக்க வேண்டும்” என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
அதோடு, ம.இ.கா குற்றச்செயல்களை ஆதரிக்கப்போவதில்லை. ஆயினும் இறந்தவர்களின் பெற்றோர் கேட்கும் கேள்விகளுக்கு காவல்துறை விளக்கமளித்தே ஆக வேண்டும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.