Home கலை உலகம் சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல விருப்பம்…!

சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல விருப்பம்…!

692
0
SHARE
Ad

சென்னை, ஆக. 21- பிரபல திரைப்பட இயக்குனர் சேரனின் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல விரும்பம் தெரிவித்துள்ளார்.

இதற்கு சந்துரு தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளிடம் தாம் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தாமினி தெரிவித்துள்ளார்.

Tamil-Daily-News_42983210087முன்னதாக தாமினியின் காதலர் சந்துருவின் தாயார் ஈஸ்வரியம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

#TamilSchoolmychoice

அந்த மனுவில் தாமினியை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி அவர்களது பிடியில் வைத்துள்ளதாகவும், தாமினியை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டுமென்றும் கோரியிருந்தார்.

Daminiஇதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான தாமினி, நீதிபதியிடம் தாம் சந்துருவுடன் வாழ விரும்புவதாக கூறினார்.

இதனையடுத்து நீதிபதி அவரை மூத்த வழக்கறிஞர் ஒருவரது வீட்டிலும், தொடர்ந்து தாமினி படித்த பள்ளி தாளாளர் ஒருவரது வீட்டில் தங்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான தாமினி தற்போது தாம் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக வாக்குமூலம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த சந்துரு தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு, இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தனபாலன், பி.டி.செல்வம் அடங்கிய அமர்வு இன்று பிற்பகலுக்கு ஒத்தி வைத்துள்ளது.