Home கலை உலகம் லக்மே அலங்கார அணிவகுப்பில் பிரபல நட்சத்திரங்கள் (தொகுப்பு 1)

லக்மே அலங்கார அணிவகுப்பில் பிரபல நட்சத்திரங்கள் (தொகுப்பு 1)

173
0
SHARE

மும்பாய், ஆகஸ்ட் 27 – பிரபல அழகு சாதன தயாரிப்பு நிறுவனமான லக்மே (Lakme) நடத்துகின்ற ஆடை அலங்கார அணிவகுப்புகள் உலகப் பிரசித்தி பெற்றவை. இந்த அலங்கார அணிவகுப்புகளில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு பவனி வருவார்கள்.

ஆகஸ்ட் 20 முதல் 24வரை மும்பாயில் நடைபெற்ற லக்மே நிறுவனத்தின் ஆடை அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு நிகழ்வுகளைக் கலகலக்க வைத்த சில பிரபலங்கள்:

Bollywood actress Shri Devi and director Boney Kapoor pose for photographs as she arrives at the Lakme Fashion Week grand finale by Indian designer Manish Malhotra in Mumbai, India, 24 August 2014. The presentations of the Winter/Festive 2014 collections are held from 20 to 24 August.

ஆண்டுகள் எத்தனை ஆனாலும் ‘மயிலு’வின் மவுசு மட்டும் குறைவதே இல்லை – நடிகை ஸ்ரீதேவி, கணவர் போனி கபூருடன்…ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற இந்திய ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ராவின் குளிர்கால மற்றும் பெருநாள் ஆடைகளுக்கான அலங்கார அணிவகுப்பில்….

Bollywood actress Kajol Devgan poses for photographs as she arrives at the Lakme Fashion Week grand finale by Indian designer Manish Malhotra in Mumbai, India, 24 August 2014. The presentations of the Winter/Festive 2014 collections are held from 20 to 24 August.

“மின்சாரக் கனவு” படத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே என ஆட்டம் போட்டு தமிழ் இரசிகர்களை மயக்கி விட்டு – பின்னர் இந்தி நடிகர் அஜய் தேவ்கனின் மனைவியாகி, இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகி விட்ட நடிகை காஜல்… அண்மையில் கோலாலம்பூர் வந்து அஸ்ட்ரோ பாலிவுட் அலைவரிசையையும் தொடக்கி வைத்து விட்டு சென்றார்…

Bollywood actress Karishma Kapoor poses for photographs as she arrives at the Lakme Fashion Week grand finale by Indian designer Manish Malhotra in Mumbai, India, 24 August 2014. The presentations of the Winter/Festive 2014 collections are held from 20 to 24 August.

கரினா கபூரின் மூத்த சகோதரி – அந்த நாளில் இந்தித் திரையுலகைக் கலக்கிய கரிஷ்மா கபூர்…

 Bollywood actress Kareena Kapoor Khan presents a creation by Indian designer Manish Malhotra during the Lakme Fashion Week in Mumbai, India, 24 August 2014. The presentations of the Winter/Festive 2014 collections are held from 20 to 24 August.

அக்காவுக்கு நானும் சளைத்தவள் அல்ல என அலங்கார ஆடையுடன் அழகு காட்டும் இந்தி நடிகை கரினா கபூர்….

Bollywood actress Priyanka Chopra  presents a creation by Indian designer Varun Bahl during the Lakme Fashion Week in Mumbai, India, 24 August 2014. The presentations of the Winter/Festive 2014 collections are held from 20 to 24 August.

இன்றைய மற்றொரு இந்தித் திரைப்பட பிரபலம் பிரியங்கா சோப்ரா….

Photos: EPA

Comments