Home நிகழ்வுகள் 12வது உலக தமிழ் இணைய மாநாடு!

12வது உலக தமிழ் இணைய மாநாடு!

979
0
SHARE
Ad

um-sliderகோலாலம்பூர், மார்ச்.1- உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு மலேசிய நாட்டின் மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 12-வது உலகத்தமிழ் இணைய மாநாட்டை ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி முதல் ஆகஸ்டு 18-ந்தேதி வரை 4 நாட்கள் மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடக்கிறது.

மாநாடு, கருத்தரங்கு, கண்காட்சி ஆகியவை 3 இடங்களில் நடக்கிறது. ஆய்வுக்கருத்தரங்கு, பயிலரங்கம் ஆகஸ்டு 15, 16 17 தேதிகளில் நடக்கிறது. கண்காட்சியும் மக்கள் கூடமும் ஆகஸ்டு 16.17. 18 தேதிகளில் நடைபெற உள்ளது. கருத்தரங்கு குழுவிற்கு பத்ரி சேஷாத்ரி தலைமை தாங்குகிறார்.

இந்த ஆண்டின் கருத்தரங்குக்கு கையடக்க கணினிகளில் தமிழ்க்கணிமை என்ற தலைமை கருத்தையொட்டிய ஆய்வுக்கட்டுரைகளை வரவேற்கிறோம்.

#TamilSchoolmychoice

கட்டுரைகள் மின் அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பவேண்டும். கட்டுரை சுருக்கங்களை அனுப்ப மே 31-ந்தேதி கடைசிநாள்.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக தமிழ்ப்பேராயம் வழங்கும் விருதுகளும் உத்தமம் வாயிலாக வழங்க பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த தகவலை கான்பூர் ஐ.ஐ.டி.தலைவர் பேராசிரியர் மு.அனந்தகிருஷ்ணன், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பொன்னவைக்கோ, தமிழ் இணைய கல்விக்கழக இயக்குனர் பா.ரா.நக்கீரன் ஆகியோர் தெரிவித்தனர்.