ஏற்கனவே விஷால் தரப்பிலிருந்து, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், அதில் எங்கள் தரப்பிடம் விளக்கம் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி நடிகர் விஷால், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கைத் தடை(caveat) மனு தாக்கல் செய்துள்ளார்.