Home கலை உலகம் மாரி படம் அமோக வசூல்: மகிழ்ச்சியில் தனுஷ்!

மாரி படம் அமோக வசூல்: மகிழ்ச்சியில் தனுஷ்!

819
0
SHARE
Ad

dhanush-openசென்னை, ஜூலை 22- மாரி படத்தைப் பற்றிச் சாதகமான விமரிசனங்கள் வரவில்லை என்றாலும், வியாபார ரீதியில் அமோக வசூலைக் குவித்து வருகிறது மாரி. இதனால் தனுஷும் படக் குழுவினரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெளியான முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் வசூல் செய்து தனுஷுக்குப் பெருமை சேர்த்துவிட்டது மாரி.

இதுவரை வெளியான எந்த ஒரு தனுஷ் படமும் முதல் நாளில் இந்த வசூலைப் பெற்றதில்லை. இதைத் தொடர்ந்து இந்தச் செய்தியைக் கொண்டாடும் விதமாகப் படக்குழுவினரோடு இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார் தனுஷ்.

#TamilSchoolmychoice

maari233முதல் மூன்று நாள்களில் ரூ. 20 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது. வெளிநாட்டில் மட்டும் ரூ. 10 கோடி! இதுவும் தனுஷ் படங்களில் ஒரு சாதனையாக உள்ளது.

வெளியான அன்றே மாரி படத்திற்கு மிகுந்த வரவேற்பளித்த ரசிகர்களுக்குத் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ். தயாரிப்பாளர்களில் ஒருவரான சரத்குமாரும் தனது மகிழ்ச்சியை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும், படத்தில் பணியாற்றிய முக்கியமான கலைஞர்களுக்குத் தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்துள்ளார் தனுஷ்.