Home இந்தியா கேரள முதலமைச்சர் மீது எதிர்க்கட்சியினர் செருப்பு வீசித் தாக்குதல்!

கேரள முதலமைச்சர் மீது எதிர்க்கட்சியினர் செருப்பு வீசித் தாக்குதல்!

555
0
SHARE
Ad

ommen-chandyதிருவனந்தபுரம், ஜூலை 24- கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியின் கார் மீது எதிர்க்கட்சியினர் செருப்பு வீசித் தாக்குதல் நடத்தியதால் கேரளாவில் பரபரப்பு நிலவி வருகிறது.

திருவனந்தபுரம் அருகே உள்ள பலராமபுரத்தி்ல் நீச்சல் குளம் ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக,நேற்று மாலை சபாநாயகர் எம். ஸ்கந்தன், சட்டத்துறை அமைச்சர் முனீர் ஆகியோருடன் முதலமைச்சர் உம்மன் சாண்டி காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அவர் வரும் வழியில்  அவருக்கு எதிராக முழக்கமிட்டபடி மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவருக்குக் கருப்பு கொடி காட்டினர்.

#TamilSchoolmychoice

அந்தச் சலசலப்பிற்கு இடையே  சிலர் அவரது கார் மீது திடீரெனச் செருப்பை வீசித் தாக்கத் தொடங்கினர்.

உம்மன் சாண்டி காருக்குள் இருந்ததால் அவர் மீது செருப்பு விழாமல், பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் மீது விழுந்தது. உடனே, காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை இலேசான தடியடி நடத்திக் கலைத்தனர். பின்னர், உம்மன் சாண்டியைப் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இதுபோல் அடிக்கடி அவர் மீது தாக்குதல் நடத்துவது எதிர்க்கட்சிக்காரர்களின் வாடிக்கையாகி வருகிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டு அக்போடர் மாதம், கண்ணூரில் நடந்த காவலருக்கான தடகளப் போட்டியினைத்  தொடங்கி வைக்க வந்தபோது, அவர் மீது எதிர்க்கட்சியினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அநாகரிகமான செயலுக்கு ஆளும் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.