Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவைக் காண வந்தார் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி

ஜெயலலிதாவைக் காண வந்தார் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி

683
0
SHARE
Ad

umman-chandi-ex-kerala-cm

சென்னை – அப்போல்லோவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டு நலம் விசாரிக்க, கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.

அப்போல்லோ மருத்துவமனைக்குள் சென்று அங்கு தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடமும் விசாரித்து அறிந்து கொண்டதாகவும், மருத்துவமனையில் இருந்த தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், ஆகியோரையும், மக்களவைத் துணைத் தலைவர் தம்பித்துரையையும் சந்தித்ததாகப் பின்னர் உம்மன் சாண்டி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து, தனது பணிகளைத் தொடர்வதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.