Home Featured நாடு பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு இனிதே நிறைவு பெற்றது! (படச் செய்திகள்)

பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு இனிதே நிறைவு பெற்றது! (படச் செய்திகள்)

1103
0
SHARE
Ad

200-yr-tamil-kalvi-theme

சுங்கைப்பட்டாணி – கடந்த நான்கு நாட்களாக இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வந்த பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு இன்று பிற்பகலோடு இனிதே நிறைவு பெற்றது. மலேசியாவில் தமிழ்க் கல்வி தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டை கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.

கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் இம்மாநாட்டின் ஆலோசகராக செயல்பட்டு வழி நடத்த, வே.இளஞ்செழியன் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக செயல்பட்டார்.

#TamilSchoolmychoice

200-yr-tamil-kalvi-conf-delegates-with-kamalanathan

மாநாட்டு பங்கேற்பாளர்கள் சிலர் கல்வி துணை அமைச்சர் ப.கமலநாதன் மற்றும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வே.இளஞ்செழியன் ஆகியோருடன்….

மாநாட்டின் நிறைவு நாளான இன்று உள்நாட்டுப் பேராளர்களுக்காக காலையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு நெறியாளராக மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வே.இளஞ்செழியன் செயல்பட்டார்.

200-yr-tamil-kalvi-final-day-conf-elenchelian

இன்று ஞாயிற்றுக்கிழமை மாநாட்டு நிறைவு நாளில் நடைபெற்ற கலந்துரையாடலை நெறியாளராக வழி நடத்திய மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வே.இளஞ்செழியன்…

வெளிநாட்டுப் பேராளர்களோ, மாநாடு நடைபெறும் கெடா மாநிலத்திலுள்ள பூஜாங் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். சோழ மன்னர்களின் கடார வருகையை நினைவுபடுத்தும் வரலாற்றுச் சான்றுகளையும், அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப்பட்ட இந்து மன்னர்களின் பழங்கால சின்னங்களையும் கொண்டது பூஜாங் பள்ளத்தாக்கு.

200-yr-tamil-kalvi-final-day-conf-chandrakala

மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றிய சந்திரகலா ஐயப்பன், மாநாட்டு நிறைவு நாளில் நன்றியுரை வழங்குகின்றார்…

200-yr-tamil-kalvi-conf-group

  மாநாட்டின் பங்கேற்பாளர்கள் சிலர்…

நிறைவு விழாவில் முனைவர் தமிழகத்தைச் சேர்ந்த இரா.நிரஞ்சன் பாரதி (மகாகவி பாரதியாரின் எள்ளுப் பேரன்), பேராசிரியர் முனைவர் க.பாஸ்கரன் ஆகியோர் உரையாற்றினர். கல்வி துணை அமைச்சர் கமலநாதன் சார்பாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வே.இளஞ்செழியன் நிறைவுரை வழங்கி மாநாட்டை நிறைவு செய்தார்.

மதிய உணவுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் ஒரு நிறைவுக்கு வந்தன.

muthu-nedumaran-200-yr-tamil-kalvi-conf-20-oct-2016

மாநாட்டின் முதல் நாள் வியாழக்கிழமை (அக்டோபர் 20)   நடைபெற்ற முதல் அமர்வில் உரையாற்றிய கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன். மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகர்களில் ஒருவராகவும் முத்து நெடுமாறன் செயல்பட்டார்.

200-yr-tamil-kalvi-conf-jeevendran-chemen-mauritius

மொரிஷியஸ் நாட்டிலிருந்து வருகை தந்து உரையாற்றிய ஜீவேந்திரன் செம்மன்

மாநாட்டின் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 21) மாநாட்டின் உரையாற்றிய மொரிஷியஸ் நாட்டின் மகாத்மா காந்தி கல்வி நிலையத்தின் முனைவர் டாக்டர் ஜீவேந்திரன் செம்மன், மொரிஷியஸ் நாட்டின் பணமான ஆயிரம் ரூபாய் நோட்டைக் காட்டி அதில் தமிழ் இடம் பெற்றிருப்பதை சுட்டிக் காட்டினார்.

தமிழ் பரவலாக மொரிஷியஸ் நாட்டுத் தமிழர்களால் பேசப்படாவிட்டாலும், அவர்களின் இதயங்களில் வீற்றிருக்கின்றது என்று ஜீவேந்திரன் கூறினார். அரசாங்கப் பள்ளிகளில் தமிழ்மொழி போதிக்கப்படுவதாகவும் கூறிய ஜீவேந்திரன், தமிழ் மொழியைப் போதிப்பதற்கான பாடத் திட்டத்தை அரசாங்கமே உருவாக்கியுள்ளது என்றும் மாநாட்டில் தெரிவித்தார்.

200-yr-tamil-kalvi-mauritius-rep-talk

மொரிஷியஸ் நாட்டின் ஜீவேந்திரன் வழங்கிய உரையின் தலைப்பும் – அவரது பின்னணியையும் காட்டும் தகவல்களும்…

200-yr-tamil-kalvi-chandraguru-conf

மாநாட்டில் உரையாற்றிய கல்வி அமைச்சின் அதிகாரி வே.சந்திரகுரு. மாநாட்டு ஏற்பாட்டுக் குழு செயலவையிலும் சந்திரகுரு பணியாற்றியிருந்தார்.

200-yr-tamil-kalvi-conf-group-photoநினைவுக்காக மாநாட்டு பங்கேற்பாளர்களின் குழுப்படம்