கோலாலம்பூர் : 2021ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு நிறைவைக் காண்கின்றது.
அதனை முன்னிட்டு, 21.07.2021 தொடங்கி எதிர்வரும் 31.10.2021 வரை 3 மாதக் காலத்திற்கு ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவினை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, முன்னாள் கல்வித் துணையமைச்சரும் ம.இ.கா கல்விக் குழுத் தலைவருமாகிய டத்தோ ப.கமலநாதன் தலைமையில் ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 28) மலேசியத் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவின் அதிகாரப்படியான தொடக்க நிகழ்ச்சி இயங்கலை வழியாக நடைபெற்றது.
இந்த இயங்கலை நிகழ்ச்சியில் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் கல்வி அமைச்சின் முன்னாள் துணையமைச்சருமான டத்தோ ப.கமலநாதன் உரையாற்றினார்.
கல்வி அமைச்சின் முன்னாள் அதிகாரி சு.பாஸ்கரன் வரவேற்புரையாற்றிய இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ க.குமரன், டத்தோ ஆ.சோதிநாதன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நேற்றைய அதிகாரத்துவ தொடக்க நிகழ்ச்சியை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal