Home நாடு “மலேசியாவில் தமிழ்க்கல்வி 205-ஆம் ஆண்டு விழா” – ‘இலச்சினை உருவாக்கும் போட்டி’ இறுதி நாள் ஜூலை...

“மலேசியாவில் தமிழ்க்கல்வி 205-ஆம் ஆண்டு விழா” – ‘இலச்சினை உருவாக்கும் போட்டி’ இறுதி நாள் ஜூலை 30

841
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா தொடர்பில் ‘இலச்சினை உருவாக்கும் போட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதல்நிலையில் வெற்றிபெறும் இலச்சினை [Logo] இவ்வாண்டிற்கான அதிகாரப்படியான சின்னமாகப் பயன்படுத்தப்படும்.

இலச்சினை உருவாக்கும் போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:-

1.இப்போட்டியில் மலேசியர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும்.

#TamilSchoolmychoice

2.ஒருவர் ஓர் இலச்சினை மட்டுமே அனுப்ப வேண்டும்.

3.இலச்சினை கையால் வரைந்ததாக [A4 Size] இருக்கலாம் அல்லது கணினி வரைகலையாக [JPEG Format] இருக்கலாம்.

4.இலச்சினையில் தமிழ்மொழியின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் குறியீடு / அடையாளம் இடம்பெற வேண்டும்.

5.மலேசிய நாட்டினைக் குறிக்கும் குறியீடு / அடையாளம் இலச்சினையில் இடம்பெற வேண்டும்.

6.இலச்சினையில் 1816 – 2021 எனும் ஆண்டுகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

7.இலச்சினையில் கீழேயுள்ள ஏதாவது ஒரு முழக்கவரி இடம்பெற்றிருக்க வேண்டும். [‘தமிழ் நம்பிக்கையே தன்னம்பிக்கை’ அல்லது ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’]

8.இலச்சினையில் நீலம், சிவப்பு. மஞ்சள், வெள்ளை [மலேசியக் கொடியின் வண்ணங்கள்] ஆகிய 4 வண்ணங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.

9.வெற்றிபெற்ற இலச்சினையின் உரிமத்தை ஏற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

10.சிறந்த இலச்சினைக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும் [ முதல் பரிசு RM500.00 மற்றும் 3 ஆறுதல் பரிசுகள் தலா RM200.00]

11.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.

12.பங்கேற்பாளர்கள் கீழ்க்காணும் முகவரிக்குத் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டும்.

கையில் வரைந்த ஓவியம் அனுப்ப வேண்டிய முகவரி:-

SETIAUSAHA, MALAYSIA TAMIL KALVI, D/A 25, JLN ANGGERIK PERDANA 3/3, TAMAN ANGGERIK PERDANA, JALAN SEMENYIH. 43000 KAJANG, SELANGOR.

கணினி வரைகலை ஓவியம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:-

e-mail : malaysiatamilkalvi@gmail.com

13.பங்கேற்பாளர்கள் கீழ்க்காணும் கூகிள் படிவத்தில் தங்கள் முழு விவரங்களை அனுப்ப வேண்டும்.

Google Form Link : https://tiny.cc/mytk205_logo

14.போட்டிக்கான இறுதி நாள் 30.07.2021 [சனிக்கிழமை]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205-ஆம் ஆண்டு இலச்சினை உருவாக்கும் போட்டியில் கலந்துகொள்ள மலேசியர்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.