Home Featured இந்தியா கேரள சட்டமன்றத் தேர்தல்: மலேசிய நேரம் 5.00 மணிவரை- ஒரு வரிச் செய்திகள்!

கேரள சட்டமன்றத் தேர்தல்: மலேசிய நேரம் 5.00 மணிவரை- ஒரு வரிச் செய்திகள்!

884
0
SHARE
Ad

srishanthதிருவனந்தபுரம் – இன்று தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளில், 1203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 109 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 2.61 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி, கோட்டயத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அதேபோல காங்கிரஸ் தலைவர் சசிதரூர் திருவனந்தபுரத்தில் தனது வாக்கினை செலுத்தினார். பாஜக வேட்பாளரும், கிரிக்கெட் வீரருமான ஸ்ரீசாந்த் கொச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

#TamilSchoolmychoice

Cii1spwXIAEygE_முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுல் ஒருவருமான ஏ.கே.அந்தோனி திருவனந்தபுரத்திலும் வாக்களித்தனர். அதேபோல, திருவனந்தபுரத்தில் நாடாளுமன்ற எம்.பி. நடிகர் சுரேஷ் கோபி வாக்களித்தார்.