Home இந்தியா ராஜபக்சே வருகையின் போது எழுந்து நிற்காத தன்மானச் சிங்கம் அப்துல் கலாம் – வைகோ 

ராஜபக்சே வருகையின் போது எழுந்து நிற்காத தன்மானச் சிங்கம் அப்துல் கலாம் – வைகோ 

776
0
SHARE
Ad

Vaiko

சென்னை, ஜூலை 28 – மோடியின் பதவி ஏற்பு விழாவில், ராஜபக்சே வருகை தந்திருந்த போது, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஆனால், அப்துல் கலாம் இம்மி அளவும் இருந்த இடத்தில் இருந்து அசையாமல் இருந்தார் என்று வைகோ, அப்துல் கலாமின் மறைவு குறித்த இரங்கல் செய்தியில் உண்மை நிகழ்வை எடுத்துக் கூறினார்.

கலாமின் மறைவு குறித்து வைகோ கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“அப்துல் கலாமின் மறைவு தாங்க முடியாத துக்கத்தைத் தருகிறது. அவர் குடியரசுத் தலைவராக பதவி வகித்த காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு செல்ல நேர்ந்தது. அப்போதெல்லாம், பழந்தமிழரின் பெருமை பற்றியே பேசிக்கொண்டிருப்பார். தமிழரின் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும் வெளிஉலகிற்கு எடுத்துரைத்தார். குறிப்பாக கிரேக்க நாட்டில் அவரின் பேச்சு வைர எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. கோடானகோடி மக்களின் ஏக்கக் கனவுகளை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக குடியரசுத் தலைவர் மாளிகையை மாற்றினார்” என்று கூறியுள்ளார்

மேலும் அவர், “இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக நரேந்திர மோடி, 2014-ல் பதவி ஏற்ற போது, அந்த விழாவிற்கு ஈழத்தமிழர்களில் லட்சக்கணக்கானவர்களை கொன்று குவித்த கொடும்பாவி மகிந்த ராஜபக்சே குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா அரங்கத்திற்குள்ளே நுழைந்த போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று அவருக்கு கரம் குலுக்கினார்கள். ஆனால், சுயமரியாதை ஒளியாகத் திகழ்ந்த அப்துல் கலாம் அவர்கள், ஒரு இம்மி அளவு அசைவைக் கூட காட்டாமல் அப்படியே அமர்ந்திருந்தார். அத்தகைய தன்மானத் சிங்கத்தின் மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலியை மிகுந்த துக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்