இது தொடர்பாக,அப்துல் கலாமின் அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயருடைய பேரன் சலீம், “இந்தச் செய்தியை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.எங்கள் ஊர் மக்கள் அனைவரும் ஆறாத துயரத்தில் கண்ணீர் விட்டுக் கதறியபடி இருக்கிறார்கள்.
தாத்தாவின் உடலை ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம். எங்களுடைய விருப்பம் மட்டுமல்ல; அனைத்து மதத்தினர் மற்றும் பொதுமக்களின் விருப்பமும் அதுதான். அதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
ராமேஸ்வரத்திலுள்ள ஜமாத்தும் இந்தக் கோரிக்கையை மத்திய அரசிற்கு வைத்துள்ளது.
“இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது உடலை ராமேஸ்வரத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும். அவரது கடைசி முகத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் அங்கு காத்திருக்கின்றனர்”என்று ஜமாத் தலைவர் அப்துல் ஹமீது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்துல் கலாமின் மறைவையொட்டி,ராமேஸ்வரத்தில் உள்ள கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.