Home நாடு பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் – மொகிதினுக்கு எதிர்கட்சிகள் அழைப்பு

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் – மொகிதினுக்கு எதிர்கட்சிகள் அழைப்பு

839
0
SHARE
Ad

mat-sabuகோலாலம்பூர், ஜூலை 28 – அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மொகிதின் யாசினும், அவருக்கு ஆதரவாகவுள்ள தேசிய முன்னணி விசுவாசிகளும் எதிர்கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

கெராக்கான் ஹராப்பான் பாரு (ஜிஎச்பி) கட்சி உருவாக்கியுள்ள ‘மலேசியாவைப் பாதுகாப்போம்’ திட்டத்தில், இதுவும் ஒரு பகுதி தான் என அக்கட்சியின் தலைவர் முகமட் சாபு, இன்று ஜசெக, பிகேஆர், ஜிஎச்பி உள்ளிட்ட கட்சிகளில் 16 முக்கியத் தலைவர்களுடன் சேர்ந்து நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்க இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இத்திட்டம் வெற்றிபெற்றால், இன்னும் ஒரு ஆண்டு காலம் நாட்டின் தலைவராகச் செயல்பட இடைக்காலப் பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice