அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “திறமையான அறிவியல் அறிஞராகவும், தலை சிறந்த தலைவராகவும் திகழ்ந்தவர் அப்துல் கலாம். அவர் இந்தியாவின் மரியாதைக்குரிய பல தலைவர்களில் மிகவும் முக்கியமானவர்.
இந்தியர்களுக்கு மடுமல்லாமல் உலகில் வாழும் எல்லோருக்கும் அவர் தன்னம்பிக்கையும் உத்வேகமும் ஊட்டக் கூடியவராக விளங்கினார். அத்தகைய பெருமை மிக்க அப்துல் கலாமின் மறைவுக்கு, அமெரிக்க மக்களின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலாமை இழந்து வாடும் இந்திய மக்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.