Home இந்தியா அப்துல் கலாமின் இறுதிச் சடங்கை முன்னிட்டு நாளை அரசுப் பொது விடுமுறை

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கை முன்னிட்டு நாளை அரசுப் பொது விடுமுறை

534
0
SHARE
Ad

abdul kalamசென்னை, ஜூலை29- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கை முன்னிட்டு, தமிழகத்தில் நாளை( ஜூலை 30)  அரசுப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

“முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற முறையில் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், அவரது இறுதிச்சடங்கு நடக்கும் 30-ஆம் தேதியன்று அனைத்து அரசு மற்றும் தனியார்க் கல்வி நிறுவனங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குப் பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது.”என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.