Home நாடு அமைச்சரவை மாற்றம்: மசீசவுக்கு கூடுதல் பொறுப்புகளை அளித்தமைக்கு நன்றி – லியோவ்

அமைச்சரவை மாற்றம்: மசீசவுக்கு கூடுதல் பொறுப்புகளை அளித்தமைக்கு நன்றி – லியோவ்

564
0
SHARE
Ad

Liow-Tiong-Laiகோலாலம்பூர், ஜூலை 29 – மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் மசீசவுக்கு கூடுதாக இரு பொறுப்புகளை அளித்தமைக்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு, மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை, பிரதமர் நஜிப் தனது தலைமையிலான அமைச்சரவையை மாற்றியமைத்தார். இதையடுத்து அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் இரண்டாவது அமைச்சராக டத்தோஸ்ரீ ஆங் கா சுவானும், துணைக் கல்வியமைச்சராக செனட்டர் சோங் சின் வூனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இருவரில் ஆங், மசீசா-வின் பொதுச் செயலாளராகவும், சோங் அக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராகவும் உள்ளனர்.

#TamilSchoolmychoice

“நாட்டின் கல்வித்துறை மற்றும் தொழில்துறை குறித்து சீன சமுதாயம் எப்போதுமே அக்கறை கொண்டுள்ளது. இந்நிலையில் மசீசவுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்புகளை நல்ல தளங்களாகப் பயன்படுத்தி மக்களுக்கும் நாட்டுக்கும் சிறந்த சேவையளிக்க கடுமையாக உழைப்போம்,” என்று போக்குவரத்து அமைச்சருமான லியோவ் கூறினார்.

மசீச சார்பில், அதன் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் வீ கா சியோங் ( பிரதமர் துறை அமைச்சர்), உதவித் தலைவர்கள் டத்தோ லீ சீ லியோங் (அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர்), டத்தோ சுவா டீ யோங் (நிதி) மற்றும் டத்தின் ச்யூ மெய் ஃபன் (மகளிர், குடும்ப மற்றும் சமுதாய வளர்ச்சித்துறை) ஆகியோரும் அமைச்சரவையில் உள்ளனர்.