Home இந்தியா மரியாதைக்குரிய தலைவர் அப்துல் கலாம்: ஒபாமா இரங்கல்

மரியாதைக்குரிய தலைவர் அப்துல் கலாம்: ஒபாமா இரங்கல்

523
0
SHARE
Ad

rsz_obama1வாஷிங்டன், ஜூலை 29- இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்த வரிசையில், அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களும் அப்துல் கலாமின் மறைவிற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “திறமையான அறிவியல் அறிஞராகவும், தலை சிறந்த தலைவராகவும் திகழ்ந்தவர் அப்துல் கலாம். அவர் இந்தியாவின் மரியாதைக்குரிய பல தலைவர்களில் மிகவும் முக்கியமானவர்.

இந்தியர்களுக்கு மடுமல்லாமல் உலகில் வாழும் எல்லோருக்கும் அவர் தன்னம்பிக்கையும் உத்வேகமும் ஊட்டக் கூடியவராக விளங்கினார். அத்தகைய பெருமை மிக்க அப்துல் கலாமின் மறைவுக்கு, அமெரிக்க மக்களின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலாமை இழந்து வாடும் இந்திய மக்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.