Home உலகம் ரியூனியன் தீவில் மூன்று மாதங்களுக்கு முன்பே விமான இருக்கைகள் இருந்ததாகத் தகவல்! 

ரியூனியன் தீவில் மூன்று மாதங்களுக்கு முன்பே விமான இருக்கைகள் இருந்ததாகத் தகவல்! 

589
0
SHARE
Ad

Nicolas_Ferrierரீயூனியன், ஆகஸ்ட் 2 – ரியூனியன் தீவில் விமானத்தின் சிதைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், மூன்று மாதங்களுக்கு முன்பே துப்புரவுத் தொழிலாளி ஒருவர் விமான இருக்கை மற்றும் சூட்கேஸை கண்டெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிக்கோலாஸ் பெர்ரியர்(படம்) என்ற அந்த துப்புரவாளர், அதிகாரிகளிடம் தெரிவித்துள்ள தகவலில், மூன்று மாதங்களுக்கு முன்பு, தற்சமயம் விமான பாகம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில், நீல நிற இருக்கையும், உடைந்த சூட்கேஸ் பகுதியையும் கண்டெடுத்ததாகவும், அவை பயனற்று போய் இருந்ததால் பின்னர் அவற்றை எரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அவர் கூறியதகவலில் இருந்து அந்த பகுதி விமானத்தின் இருக்கைகளாக இருக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்சமயம், கண்டெடுக்கப்பட்ட சிதைந்த பாகம் ஆய்விற்காக பிரான்ஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.