Home Featured தமிழ் நாடு கலிங்கப்பட்டி வன்முறையை வைகோ திட்டமிட்டு நடத்தினாரா? – புதிய சர்ச்சை!

கலிங்கப்பட்டி வன்முறையை வைகோ திட்டமிட்டு நடத்தினாரா? – புதிய சர்ச்சை!

737
0
SHARE
Ad

natham_viswanathanசென்னை, ஆகஸ்ட் 3 –  கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கலிங்கப்பட்டியில் நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு, வைகோவின் முன்கூட்டிய திட்டமிடல் தான் காரணம் என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்(படம்) குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக நத்தம் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலிங்கப்பட்டியில் உள்ள ஒரு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி 1-ம் தேதி அன்று அங்கு ஒரு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் வைகோவின் தாயாரும் பங்கேற்றார். ஆனால், 2-ம் தேதி வைகோ முன்னிலையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில், வைகோவின் தாயார் கலந்து கொள்ளவில்லை.”

“அப்படியென்றால், 2-ம் தேதி வன்முறை வெடிக்கும், மதுபானக் கடை சூறையாடப்படும் என்பதால் தான் தனது தாயாரை கலந்து கொள்ள வேண்டாம் என்று வைகோ கூறியுள்ளாரா? வைகோவின் தாயார் கலந்து கொள்ளாததிலிருந்தே கலிங்கப்பட்டியில் நடைபெற்ற கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதோ? என்ற சந்தேகம் எழுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

vaiko1மேலும் அவர், “குறிப்பிட்ட அந்த மதுபானக் கடை, கடந்த 2009-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. அப்போதைய திமுக ஆட்சியில் இது தொடர்பாக எந்தவொரு போராட்டமும் அறிவிக்காத வைகோ, தேர்தல் நெருங்கும் சமயத்தில், மதுவிலக்கு கொள்கையை கையில் எடுத்திருப்பது அரசியல் சுயலாபத்திற்காகத் தான்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.