Home Featured இந்தியா இந்துக்களைக் கொல்ல வந்தேன் – இந்தியப் பாதுகாப்புப் படையிடம் பிடிபட்ட தீவிரவாதி தகவல்!

இந்துக்களைக் கொல்ல வந்தேன் – இந்தியப் பாதுகாப்புப் படையிடம் பிடிபட்ட தீவிரவாதி தகவல்!

613
0
SHARE
Ad

terror_boyபுது டெல்லி, ஆகஸ்ட் 5 – இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பூஞ்சில், 3 இந்தியர்களை பிணைக்கைதியாக வைத்திருந்த தீவிரவாதியை இந்திய பாதுகாப்புப் படை கைது செய்தது. உஸ்மான் கான் என்ற அந்த பயங்கரவாதி, பாகிஸ்தானில் இருந்து வந்ததாகத் தெரிவித்துள்ளான். இதில் மற்றொரு அதிர்ச்சிகரமான உண்மை, அவன் வயது 16 என்பதாகும்.

ஆகஸ்ட் 4-ம் தேதி (நேற்று ) இரவு 11 மணி முதல் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் இராணுவமும், உதம்பூர் வனப்பகுதி அருகே தீவிரவாதிகளும் இந்திய இராணுவத்தினர் மீது தொடர் தாக்குதலை நடத்தி வந்தனர். இந்த தாக்குதலின் போது தீவிரவாதிகள், பொது மக்கள் 3 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற தாக்குதலுக்கு பின், அவர்களை விடுவித்தனர். அப்போது நடந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

அவனிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், இந்திய சுதந்திர தினத்தை குறி வைத்து, தீவிரவாதிகள் 12 நாட்களுக்கு முன்பே இந்தியாவிற்குள் நுழைந்து விட்டதாக தெரிவித்துள்ளான். லக்ஷர் இ தொய்பா அமைப்பில் பயிற்சி பெற்ற அவனுக்கு, இந்துக்களை கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப்பில், தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், பயங்கரவாதிகள் இந்திய சுதந்திர தினத்தை குறி வைத்துள்ளதால், இந்திய நகரங்களை கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வர இந்திய அரசு முடிவு செய்துள்ளது.