Home கலை உலகம் லாரன்சின் நாகா படத்தில் ஜோதிகா!

லாரன்சின் நாகா படத்தில் ஜோதிகா!

760
0
SHARE
Ad

NTLRG_150616100837000000சென்னை, ஆகஸ்ட் 5- சுமார் எட்டாண்டு இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது மட்டுமல்லாமல், ரசிகர்கள் மத்தியில் இன்னும் அவருக்கு வரவேற்பு இருக்கிறது என்பதையும், எத்தனை ஆண்டானாலும் ரசிகர்கள் அவரை மறக்க மாட்டார்கள் என்பதையும் எடுத்துக்காட்டியது.

ஜோதிகா தொடர்ந்து நடிப்பாரா? நடித்தால் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பார் என்கிற கேள்வியும் எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்களிடத்தில் மட்டுமின்றி, திரையுலகினரிடத்திலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், காஞ்சனா 2-ன் பெரும் வெற்றிக்குப் பிறகு தானே நடித்து இயக்கவுள்ள நாகா படத்தில் ஒரு முக்கியமான- வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகாவை அணுகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

ஜோதிகா நடித்தால் அந்தக் கதாபாத்திரத்திற்கே தனி உயிர்ப்பு வந்துவிடும் என்றும்,ஜோதிகாவின் மற்றொரு பரிமாணம் வெளிப்படும் என்றும் லாரன்ஸ் நினைக்கிறார்.

சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த பாத்திரத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.அதை விடப் பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக லாரன்ஸ் உருவாக்கியுள்ள கதாபாத்திரம் இருக்குமாம்.

லாரன்ஸ் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்.

ஜோதிகா நடித்தால் அவர் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்கவும் லாரன்ஸ் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.ஜோதிகா இன்னும் தனது முடிவைத் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.