Home இந்தியா தமிழகத்தில் 1000 மதுக்கடைகளை மூட அரசு முடிவு!

தமிழகத்தில் 1000 மதுக்கடைகளை மூட அரசு முடிவு!

574
0
SHARE
Ad

maசென்னை, ஆகஸ்ட் 8- தமிழ்நாட்டில் மதுக்கடைகளைக் குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக டாஸ்மாக் மதுக்கடை அதிகாரிகள் தீவிரக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் சுமார் 3,000 மதுக்கடைகளை மூடலாம் எனத் தமிழக அரசுக்குக் காவல்துறை பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும், மாணவர்களும், பெண்களும் போராடி வருவதால், ‘பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை; மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்’ எனத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

குறிப்பாகப் பள்ளிகள், கல்லூரிகள்,கோவில்கள், மருத்துவமனைகள்,கடைவீதிகள் அருகே உள்ள மதுக்கடைகளை மூடுவது அவசியம் என்ற முடிவிற்குத் தமிழக அரசு வந்துள்ளது.

இதுதொடர்பாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையைக் கவனிக்கும் உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா, காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.மேலும், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சி.என். மகேஸ்வரன் தலைமையில் உயர் அதிகாரிகள்ஆலோசனைக் கூட்டமும் நடந்தது.

இதனால், விரைவில் கிட்டத்தட்ட 1000 மதுக்கடைகளுக்கும் மேல் மூடப்படும் எனத் தெரிகிறது.