புது டெல்லி – இந்தியாவில் பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ, பெண்களே நடத்தும் பேருந்து என வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் விரும்பத்தகாத சற்றே நெருடலான மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. அது தான், ‘மகளிர் மட்டும்’ மதுக்கடை.
டெல்லியில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில், பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் விற்பனையாளர், உதவியாளர் என அனைத்திற்கும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வகையான மதுபானங்களும் பெண்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆண்களே மது விரும்பிகளாக இருந்து வரும் நிலையில், பெண்களின் மதுப்பழக்கம் என்பது பட்டவர்த்தனமாக வெளியே தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், நாட்டின் தலைநகரிலேயே பெண்களுக்காக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.