Home உலகம் அனைத்துலக செயற்கைக்கோளுக்கு அப்துல் கலாம் பெயரைச் சூட்ட கேனியஸ் அமைப்பு முடிவு

அனைத்துலக செயற்கைக்கோளுக்கு அப்துல் கலாம் பெயரைச் சூட்ட கேனியஸ் அமைப்பு முடிவு

616
0
SHARE
Ad

Abdul kalamநியூயார்க், ஆகஸ்ட் 8- அனைத்துலக அளவில் தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ள செயற்கைக்கோளுக்கு அப்துல் கலாம் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளதாகக் கேனியஸ் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

பூகம்பம், சுனாமி, புயல், சூறாவளி மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் சீற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்கா, ஐரோப்பா, கனடா முதலிய முக்கியக் கண்டங்கள் ஒருங்கிணைந்து செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி, விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளன.

இம்முயற்சிக்காக பிரத்தியேகமாகக் கேனியஸ் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சர்வதேச அளவில் தயாரிக்கப்படும் அந்தச் செயற்கைக்கோளுக்கு ‘யு.என். கலாம் குளோபல் சாட்’ எனப் பெயரிட முடிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

முன்னதாக அந்த செயற்கைக்கோளுக்கு ‘டிசாஸ்டர் ரிஸ்க் ரிடக்ஸன் குளோபல் சாட் பார் டி .ஆர். ஆர்’ எனப் பெயரிட முடிவு செய்திருந்ததாகவும், கலாமின் மறைவுக்குப் பின், அவரது நினைவைப் போற்றும் விதமாகத் தற்போது  யு.என். கலாம் குளோபல் சாட் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கேனியஸ் அமைப்பின் தலைவர் மிலின்ட் பிம்பிரிக்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.