பமாகோ, ஆகஸ்ட் 8 – மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், உணவகம் ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக நடத்திய தீவிரவாத தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகக் தகவல்கள் வந்துள்ளன. மேலும், உணவக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என பலரை பிணைக்கைதிகளாக அவர்கள் பிடித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாலி அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிணைக்கைதிகளை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க போராடி வருகிறோம். பிணைக்கைதிகளுள் ஐநா பணியாளர் ஒருவரும் மாட்டிக் கொண்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
மாலி அரசு கடந்த சில வருடங்களாகவே, இஸ்லாமிய போராளிகள் இயக்கத்தின் தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. தற்போதும், அந்த அமைப்புகளுள் ஒன்றுதான் தாக்குதல் நடத்தி உள்ளது என்று தெரியவருகிறது.