Home Featured உலகம் மாலியில் தீவிரவாதத் தாக்குதல் – இருவர் பலி!

மாலியில் தீவிரவாதத் தாக்குதல் – இருவர் பலி!

936
0
SHARE
Ad

பமாகோ – நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலியில் உள்ள ஆடம்பரத் தங்கும் விடுதி ஒன்றில், தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்திருக்கின்றனர்.

மாலி தலைநகரான  பமோகாவில் உள்ள லே காபெமெண்ட் கங்காபா என்ற ஆடம்பர தங்கும்விடுதியில், நேற்று திடீரென மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்திறங்கிய தீவிரவாதிகள், அங்கிருந்தவர்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.

இதில் அவ்விடுதியில் தங்கியிருந்த 2 பேர் பலியாகினர். மேலும் பலர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மாலி தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் அங்கு அதிரடியாக நுழைந்து தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 32 பேரை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.