Home Featured தமிழ் நாடு கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு!

கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு!

751
0
SHARE
Ad

singer-kovan-arrestசென்னை – திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த பாடகர் கோவன், டாஸ்மாக்கிற்கு எதிராகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் விதமாகவும் பாடல்கள் பாடியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அவரை, காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், காவலில் எடுத்து விசாரிக்கும் அளவிற்கு வழக்கு முகாந்திரம் இல்லாததால், தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தனர்.