Home Featured நாடு ‘தானாக மாயமாகிக் கொள்ள சார்லசுக்கு வாய்ப்பு இருந்தது’ – அமெரிக் சித்து கிண்டல்!

‘தானாக மாயமாகிக் கொள்ள சார்லசுக்கு வாய்ப்பு இருந்தது’ – அமெரிக் சித்து கிண்டல்!

879
0
SHARE
Ad

Amerik sidhuகோலாலம்பூர் – கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் சத்தியப் பிரமாணம் அளித்த அவரது சகோதரரும், அமெரிக்கத் தொழிலதிபருமான சார்லஸ் சுரேஷ் மொராயிசின் வழக்கறிஞரான அமெரிக் சித்து, தன்னைப் பற்றி தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறியிருக்கும் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில், அந்த சத்தியப் பிரமாணத்தை உருவாக்கியுள்ளதாக காலிட் தன் மீது குற்றம் சாட்டியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அமெரிக் சித்து, “என் மீது அவதூறு பரப்பும் நோக்கில் அந்தக் கருத்துகள் கூறப்பட்டுள்ளது. அந்தக் கருத்து குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து எனது வழக்கறிஞர்களிடம் பேசி வருகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “சத்தியப் பிரமாணம் அளித்த பின்னர், அந்த வழக்கறிஞரின் கட்சிக்காரர்கள் மாயமாகிவிடுவது ஒன்று புதிதல்ல” என்றும் காலிட் ‘நியூ ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்’ பத்திரிக்கையில் தெரிவித்திருப்பதையும் அமெரிக் சித்து சுட்டிக் காட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், இதற்கு முன்பு தான் கையாண்ட வழக்குகளைக் காட்டிலும் இந்த வழக்கு வித்தியாசமானது என்றும் அமெரிக் சித்து தெரிவித்துள்ளார்.

“இந்த முறை எனது கட்சிக்காரருக்கு தானாக மாயமாவதற்காவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று காலிட்டுக்கு அமெரிக் சித்து கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

அல்தான்துயா வழக்கில், கடந்த 2008-ம் ஆண்டு, பிரதமர் நஜிப் துன் ரசாக்கை குற்றம் சாட்டி சத்தியப் பிரமாணம் அளித்த தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியம், அடுத்த 24 மணி நேரத்தில் அதை மறுத்து மற்றொரு சத்தியப் பிரமாணம் அளித்து விட்டு, இந்தியாவிற்குச் சென்று மறைந்து கொண்டதை அமெரிக் சித்து சுட்டிக் காட்டும் படியாக அவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.