Home Featured தமிழ் நாடு மது ஒழிப்பு போராட்டம்; பெண்கள் மீது போலீசார் தாக்குதல் (காணொளியுடன்)

மது ஒழிப்பு போராட்டம்; பெண்கள் மீது போலீசார் தாக்குதல் (காணொளியுடன்)

849
0
SHARE
Ad

Women brutally attacked by tamil nadu Policeசென்னை – தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுக் கடைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இதில் சென்னை மதுரவாயல் பகுதியில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீசார் கொடூரமாகத் தடியடி நடத்தியதில் பெண்களின் மண்டை உடைந்து படுகாயம் அடைந்தனர்.

மேலும் பலர் மீது போலீசார் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

#TamilSchoolmychoice

மக்கள் அதிகாரம் அமைப்பினர் பல்வேறுக் கட்டங்களாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.

maxresdefaultஇந்நிலையில் நேற்று மதுரவாயலில் உள்ள மதுக்கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை அவர்கள் நடத்தினர். மதுக்கடைக்குப் பூட்டு போட அவர்கள் முயன்றபோது  போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கொடூரமாகத் தடியடி நடத்தினர். போராட்டத்தை கைவிடமறுத்த பெண்கள், பெண் போலீசாரால் தர தரவென்று இழுத்துச்  செல்லப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.

போலீசார் நடத்திய தடியடியில் பல பெண்களுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.  இதே போல கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தில் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் மதுக் கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.