கொழும்பு, ஆகஸ்ட் 16 – “இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் யாரேனும் கள்ள ஓட்டு போட முயன்றால் தலையில் சுடுங்கள்” என இலங்கை தேர்தல் ஆணையம் காவல் துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை சாதகமாகப் பயன்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விட சமூக விரோத கும்பல் முயற்சித்திருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன.
தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, இருந்தும் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இந்நிலையில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று காவலர்களுக்கு அளித்துள்ள உத்தரவில், கள்ள ஓட்டு போட முயல்பவர்களை தலையில் சுடுங்கள் என்று தெரிவித்துள்ளது.