மத்தியப் பிரதேச மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி அளித்ததாக அவர் மீது சிபிஐ தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு அவர் அடிக்கடி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியுள்ளது.
மேலும், பா.ம.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு இன்று திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால், சென்னையிலுள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.