முகமது நஷீத், தனது ஆட்சி காலத்தில் அந்நாட்டின் குற்றவியல் நீதிபதி அப்துல்லா முகமதுவை கைது செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, முகமது நஷீத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதன் விளைவாக அவர் பதவி விலக நேர்ந்தது.
2013-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு, நஷீத்தின் வழக்கை கையில் எடுத்த புதிய அரசு, தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், நஷீத்திற்கு 13 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் அதிபர் என்ற கருணையின் அடிப்படையில், நஷீத்திற்கு வீட்டுக் காவல் நிரந்தரமாக்கப்படும் என அவரது கட்சியினர் எதிர்பார்த்த நிலையில், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.