Home Featured நாடு பெண்மையை உணர பிரசவ வலியை ஏற்றுக் கொண்ட முதல் மலேசியர்!

பெண்மையை உணர பிரசவ வலியை ஏற்றுக் கொண்ட முதல் மலேசியர்!

654
0
SHARE
Ad

prem_labourpainகோலாலம்பூர் –  “ஒருநாள் முதல்வராக இருந்து பார். அந்தப் பதவி ஒரு முள் கிரீடம் என்று தெரியும்” என்று ‘முதல்வன்’ படத்தில் ரகுவரன், அர்ஜூனிடம் சவால் விடுவார் இல்லையா? அதுபோல் ஒரு நாள் பெண்ணாக வாழ்ந்து பார் அப்போது உனக்குப் புரியும் பெண்களின் அவஸ்தை என்று மிக்ஸ் எப்எம் அறிவிப்பாளர்கள் பிரேமுக்கு சவால் விட்டார் சக அறிவிப்பாளர் ஆஷா.

அந்த சாவலை ஏற்றுக் கொண்ட, மிக்ஸ் எஃப்எம் அறிவிப்பாளர் பிரேம், பெண்கள் படும்பாட்டை தெரிந்து கொள்வதற்காகவும், பெண்மையை உணர்ந்து கொள்ளவும் ஒருவார காலம் பெண்ணாக வாழ்ந்துகாட்டி உள்ளார். இந்த சவாலின் உச்சகட்டமாக அவர், பெண்களின் மறுபிறப்பாகக் கருதப்படும் பிரசவ வலியை வலிந்து ஏற்றுக் கொண்டும் உள்ளார்.

என்னது பிரசவ வலியை ஆண் ஏற்றுக் கொண்டாரா? என்ற ஆச்சரியக் கேள்விகள் எழலாம். அதற்கான பதில், ஆம் ஏற்றுக் கொண்டார் என்பது தான். பிரேமிற்கும், சக பண்பலை அறிவிப்பாளர் ஆயிஷாவிற்கும் இடையே பெண் வாழ்க்கை எளிதா? ஆண் வாழ்க்கை எளிதா? என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இருவரும் ஒருவார காலம், எதிர் எதிர் பாலின வாழ்க்கையை வாழ்வதற்கு முடிவு செய்தனர்.

#TamilSchoolmychoice

பிரேம் ஒருவார காலம் பெண்ணாக வாழ்ந்தது மட்டுமல்லாமல், ஒருநாள் முழுவதும் கர்ப்பகால உடை அணிந்து, கர்ப்பிணியாகவே இருந்துள்ளார். அதன் இறுதியில் தான், பிரசவ வலியை உருவகப்படுத்தும் (Simulates) எந்திரத்தின் மூலம் பிரசவ வலியை உணர்ந்துள்ளார். இத்தகைய பரிசோதனை முயற்சியை மேற்கொள்ளும் முதல் மலேசியர் என்ற பெருமையும் பிரேமிற்கு வந்து சேர்ந்துள்ளது.

பிரேமின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். பெண்களின் பிரசவ வலியை, ஆண்கள் அனைவரும் உணர ஆரம்பித்தால், கண்டிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறையும் என்பது மறுக்க முடியாத உண்மை.