Home இந்தியா வீ.சேகர் சிக்கிய 80 கோடி சிலைத் திருட்டில் பெண் நிருபர் மாலதி கைது!

வீ.சேகர் சிக்கிய 80 கோடி சிலைத் திருட்டில் பெண் நிருபர் மாலதி கைது!

615
0
SHARE
Ad

201505150041001908_Cinema-Product-Manager-arrested_SECVPFசென்னை- இயக்குநர் வீ.சேகர் சிக்கிய 80 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைத் திருட்டில், முக்கிய மூளையாகச் செயல்பட்ட பெண் நிருபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் சிலைக் கடத்தல் தடுப்புக் காவல்துறையினர் நடத்திய சோதனையில் சாமி சிலைகளுடன் திரைப்படத் தயாரிப்பு நிர்வாகி தனலிங்கம் என்பவரும், அரசு அச்சகப் பணியாளர் கருணாகரன் என்பவரும் சிக்கினர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் பிரபலத் திரைப்பட இயக்குநர் வீ.சேகர் சிக்கினார்.

தற்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் பெண் பத்திரிக்கை நிருபர் மாலதி என்பவர் சிக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

காவல்துறையினர் கைப்பற்றிய சாமி சிலைகள் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிகண்டேஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட சிவன் – பார்வதி சிலைகளாகும்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டம் பையூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் 3 சிலைகளும், வந்தவாசி சவுந்தர்யபுரம் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இருந்த 4 சிலைகளுமாகும்.

அந்தச் சிலைகளைத் திருடத் திட்டம் தீட்டிக் கொடுத்தவரே இந்த மாலதிதான். இவர் முன்பு கைது செய்யப்பட்ட கருணாகரனின் சகோதரி ஆவார். இவரது சொந்த ஊர் வந்தவாசி ஆகும்.

எனவே, வந்தவாசியிலுள்ள கோவிலையும் சுற்றுப்புறத்திலுள்ள கோவிலையும் நோட்டம் விட்டுத் திருடுவதற்கு வரைபடம் தயாரித்துக் கொடுத்ததோடு, திருட்டுக் கும்பலோடு காரில் போய்க் காத்திருந்து திருடிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

திருட்டுத் தொழிலில் தப்பிப்பதற்கு அவருடைய நிருபர் அடையாள அட்டையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

மேலும், சிலைத் திருட்டில் காவல்துறை அதிகாரி ரவிசந்திரன் என்பவரும் உடனிருந்து உதவியிருக்கிறார்.

விசாரணிக்குப் பின் மாலதி, நேற்று நீதிமன்றக் காவலில் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சிலைத் திருட்டு வழக்கில் மாலதி, காவல்துறையின் தரப்பில் சாட்சியாக மாறச் சம்மதித்து விட்டதாகக் கூறப்படுகிறது.