Home தொழில் நுட்பம் செப்டம்பர் 9-ல் ஆப்பிளின் புதிய ஐபோன்கள் வெளியாகலாம்!

செப்டம்பர் 9-ல் ஆப்பிளின் புதிய ஐபோன்கள் வெளியாகலாம்!

524
0
SHARE
Ad

appleகோலாலம்பூர் – ஆப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி, பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அடங்கிய நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. வழக்கமாக புதிய ஐபோன்களை செப்டம்பர் மாதம் வெளியிடும் ஆப்பிள், தற்போதய நிகழ்ச்சியிலும் தனது அடுத்த தயாரிப்புகளை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆப்பிள் முந்தைய வெளியீடான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது அதன் தொடர்ச்சியாக ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 பிளஸ் எஸ்-ஐ தயாரித்து வருவதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகள் ஏற்கனவே ஆருடங்களைத் தெரிவித்துள்ளன. அதன் காரணமாக, செப்டம்பர் 9 நிகழ்ச்சியின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஒருவேளை ஐபோன் 6-ன் தொடர்ச்சியாக புதிய ஐபோன்கள் வெளியானால், முதன்மை நினைவகம் (RAM), கேமரா மற்றும் ஆப்பிளின் மெய்நிகர் பயன்பாடான ‘சிரி’ (Siri) ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எப்படியானாலும், செப்டம்பர் 9-ம் தேதி வரை, ஆப்பிள் என்ன செய்யப்போகிறது என்பது மட்டும் வெறும் ஆருடங்களாகத் தான் இருக்கும்.

#TamilSchoolmychoice

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை, ஆப்பிளின் அடுத்த வெளியீடு என்னவாக இருக்கும் என யாரும் உறுதிபடக் கூற முடியாது.