Home இந்தியா பிரதமர் மோடியின் அடுத்த 3 மாத வெளிநாட்டுப் பயண விவரம் வெளியீடு!

பிரதமர் மோடியின் அடுத்த 3 மாத வெளிநாட்டுப் பயண விவரம் வெளியீடு!

588
0
SHARE
Ad

modi00110-600புதுடெல்லி – இந்தியப் பிரதமர் மோடியின் அடுத்த 3 மாத வெளி நாட்டுப் பயணம் குறித்த விவரங்களைப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி  பதவியேற்ற 15 மாதங்களில் சுமார் 25 நாடுகளுக்கும் மேல் சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.

இதை எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

ஆனால், இதுகுறித்து மோடி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை; அவர்களுக்குக் கீழக்கண்டவாறு பதில் கூறியுள்ளார்.

“நாம் பெரிய நாடு என்ற தோரணையில், அகங்காரமாகப் பிற நாடுகளைப் புறக்கணித்தால், அதன் இழப்பு பெரிய அளவில் இருக்கும். உலக அரங்கில் இந்தியா தனித்து விடப்பட்டால் நமக்குத் தீமைதான்.

நான் உலக நாடுகளுக்குச் சென்று வருவதால் வெளிநாட்டு முதலீடுகள் பெருகியுள்ளன.

முன்னாள் ஆட்சியாளர்களுக்கு, எனது ஆட்சியில் குறை சொல்ல எதுவும் கிடைக்கவில்லை. எனவே, எனது வெளிநாட்டுப் பயணங்களிலும், நான் எத்தனை நாள் சுற்றுப் பயணம் செய்கிறேன் என்பதிலும் கவனம் வைத்துள்ளனர்.

சமீபத்திய பல்வேறு ஆய்வுகள் எனது அரசின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அதிகப்படியான ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளன என்பதே உண்மை” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி அடுத்த 3 மாதங்களுக்குப் பயணம் செய்யும் நாடுகள் பட்டியலைப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அயர்லாந்து (செப்டம்பர் 22-23)

அமெரிக்க (செப்டம்பர் 23-28), நியூயார்க் (செப்டமபர் 24,25), சான் ஜோஸ்) செப்டம்பர் 26,27)

சவுதி அரேபியா (நவம்பர் 7)- இன்னும் உறுதி செய்யபடவில்லை

இங்கிலாந்து (நவம்பர் 12-14)

துருக்கி (நவம்பர் 15-16, ஜி- 20 )

மலேசியா (நவம்பர் 20-22) மலேசியா மற்றும் ஆசியான் உச்சி மாநாட்டில் இருதரப்புப் பயணம்)

பாரிஸ், பிரான்ஸ் (டிசம்பர் இறுதியில் உலகளாவிய காலநிலை மாற்றம் உச்சி மாநாடு)

இஸ்ரேல் (அநேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருக்கலாம்)