கோலாலம்பூர் – எதிர்வரும் அக்டோபர் 23-ம் தேதி 2016-ம் ஆண்டிற்கான பட்ஜட் (நிதியறிக்கை) தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து, புதிய யோசனைகளை வரவேற்கும் நோக்கில் மலேசியர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்.
நாட்டை எந்த வகையில் முன்னேற்றலாம் என்று மக்களிடம் இருந்தே யோசனைகளைப் பெறுவதற்காக இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ள பிரதமர் அதில் பட்ஜட் குறித்து 15 வகையான பிரிவுகளை பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்.
வாழ்க்கைச் செலவுகள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வாழ்க்கை, மருத்துவ வசதி, பொதுமக்கள் பாதுகாப்பு, ஊழல் மற்றும் கல்வி ஆகிய பிரிவுகள் அதில் அடங்கியுள்ளன.
அந்த இணையதளத்தைப் பார்வையிட https://najibrazak.com/bajet2016/ என்ற இணைப்பைப் பயன்படுத்தவும்.