Home Featured இந்தியா ஆந்திராவில் கனமழை: மின்னல் தாக்கி 20 பேர் பலி; 30 பேர் படுகாயம்!

ஆந்திராவில் கனமழை: மின்னல் தாக்கி 20 பேர் பலி; 30 பேர் படுகாயம்!

719
0
SHARE
Ad

07-1441599607-rain-andhra35ஐதராபாத் – ஆந்திராவில் நேற்று பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததில், மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்தனர்; பலர் படுகாயமுற்றனர்.

படுகாயமடைந்தவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவில் தலைநகர் ஐதராபாத் முதற்கொண்டு நெல்லூர், கிருஷ்ணா, குண்டூர், கிழக்குக் கோதாவரி, பிரகாசம், அனந்தபூர், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாகச் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

#TamilSchoolmychoice

விசாகப்பட்டினத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு,  தகவல் அறிந்து உடனடியாக விஜயாவாடா திரும்பினார். காணொளிக் காட்சி மூலம் அதிகாரிகளிடம் மழைச் சேத விவரங்களைக் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார்.