Home Featured உலகம் சிங்கப்பூர் தேர்தல்: வாக்களிப்பு நிறைவடைந்தது! இன்னும் சில மணி நேரங்களில் முடிவுகள்!

சிங்கப்பூர் தேர்தல்: வாக்களிப்பு நிறைவடைந்தது! இன்னும் சில மணி நேரங்களில் முடிவுகள்!

505
0
SHARE
Ad

singapore-general-electionசிங்கப்பூர் – சிங்கப்பூரின் அரசியல் வரலாற்றில் மிகவும் ஆவலுடனும், பரபரப்புடனும் எதிர்பார்க்கப்படும் இன்றைய பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு சிங்கப்பூர் நேரம் இரவு 8.00 மணியோடு நிறைவடைந்து, தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இன்னும் சில மணி நேரங்களில் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கும்.

ஆளும் பிஏபி கட்சிதான் மீண்டும் ஆட்சியில் அமரும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கேள்விகளை எதிர்பார்த்துத்தான் சிங்கை மக்களும் உலகமெங்கும் உள்ள அரசியல் ஆர்வலர்களும், தகவல் ஊடகங்களும் தற்போது காத்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

எத்தனை தொகுதிகளை எதிர்க்கட்சிகள் வெல்லப் போகின்றன – மொத்த வாக்குகளில் எத்தனை சதவீத வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கப் போகின்றன என்ற இரண்டு கேள்விகள்தான் அவை!

விடைகளுக்குக் காத்திருப்போம்!