Home Featured உலகம் எதிர்பாராத விதமாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக சிங்கை வாக்காளர்கள் ஆதரவு!

எதிர்பாராத விதமாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக சிங்கை வாக்காளர்கள் ஆதரவு!

471
0
SHARE
Ad

singaporeசிங்கப்பூர் – பரவலான எதிர்பார்ப்புக்கு மாறாக, ஆளும் பிஏபி கட்சிக்கு ஆதரவாக சிங்கை மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் ஒரே ஒரு தொகுதியில்தான் வெல்லக் கூடிய வாய்ப்பிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூவின் மறைவு, கோலாகலமான சிங்கப்பூர் தேசிய தினக் கொண்டாட்டங்களினால் மக்களிடையே எழுந்த மன மகிழ்ச்சி – எழுச்சி, பிரதமர் லீ சியன் லுங்கின் தலைமைத்துவத்தின் மீது மக்களுக்கு எழுந்துள்ள நம்பிக்கை –

#TamilSchoolmychoice

இப்படி எல்லாமுமாக ஒன்றிணைந்து ஆளும் பிஏபி கட்சிக்கு, கடந்த பொதுத் தேர்தலை விட அதிக அளவு ஆதரவைக் கொண்டு வந்து சேர்த்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.