நடிகர் நாசர் பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பதோடு, நடிகர் சங்கத் தேர்தலிலும் விஷால் அணி சார்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நாசர், அனைத்து நடிகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
மேலும், தேர்தல் ஆலோசனைக் கூட்டங்கள், வெளியூர் நிகழ்ச்சிகள் எனப் பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
உடனே அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தற்போது அவர் நலமாக இருப்பதாகவும்,விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவரது மனைவி கமீலா தெரிவித்துள்ளார்.
Comments