Home Featured கலையுலகம் நடிகர் நாசருக்கு டாக்டர் பட்டம்; வேல்ஸ் பல்கலைக்கழகம் முடிவு!

நடிகர் நாசருக்கு டாக்டர் பட்டம்; வேல்ஸ் பல்கலைக்கழகம் முடிவு!

917
0
SHARE
Ad

nasarசென்னை – பிரபல கல்வி நிறுவனமான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் நாசருக்கு அவரது கலைச் சேவையைப் பாராட்டி ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவிக்க உள்ளது.

6 வயதில் நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்க்கையை துவங்கிய நாசரை, 1985 ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர்  ‘கல்யாண அகதிகள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து கடந்த 30 வருடங்களில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தன் கலையுலக பயணத்தை இன்றும் தொடர்ந்து வருகிறார்.

#TamilSchoolmychoice

இவரது கலைச் சேவையை பாராட்டி பிரபல கல்வி நிறுவனமான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நாசருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கவுரவிக்க உள்ளது. இந்த விழா வரும் 7-ஆம் தேதி காலை 9 மணியளவில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இவ்விழா, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 6-ஆவது பட்டமளிப்பு விழாவாகும். இவ்விழாவிற்கு வேல்ஸ் பல்கலைகழக நிறுவன வேந்தர் டாக்டர். ஐசரி கணேஷ் தலைமையேற்கிறார்.

உச்சநீதிமன்ற நீதிபதி ஜெஸ்டி செலமேஸ்வர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார். முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி டாக்டர் பி.எஸ்.சௌஹான் நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.